சட்டப்பேரவைத் தேர்தலில் வீடியோ பதிவு செய்யும் பணி ஒதுக்கக் கோரி புகைப்படக்கலைஞர் சங்கம் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் வீடியோ ஒளிப்பதிவு தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வெளியூர் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் வீடியோ பதிவு பணியை எடுத்து குறைந்த கூலியை வீடியோ பதிவாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
எனவே, கரோனா தொற்றுக் காலத்தில் தொழில் வாய்ப்பு இழந்துள்ள வீடியோ ஒளிப்பதிவாளர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக நேரடியாக புகைப்படக்கலைஞர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவார்களுக்கு பணியை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.