மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 172 கனஅடியாக சரிந்துள்ளது.
பருவமழை நிறைவடைந்த ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 172 கனஅடியாக இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 103.15 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 103.04 அடியானது.