சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக நேற்று முன்தினம் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
தமிழகத்தில் மார்ச் 4-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனவும் சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இரவில் அதிக குளிரும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இருந்தது.
இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது நடப்பாண்டில் முதல்முறையாக 100 டிகிரியை கடந்திருப்பது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி முதல்முறையாக 100.5 டிகிரியை தொட்டது குறிப்பிடத்தக்கது.