கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 54 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, நாமக்கல் பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கல்வி நிறுவனங்களின் சேர்மன் பெரியசாமி தலைமை வகித்தார். பிஎஸ்டி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் தென்னரசு நேர்முகத்தேர்வை நடத்தினார்.
இதில், சிவில் துறையில் படிக்கும் 54 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப் பட்டன. கல்லூரி முதல்வர் அசோகன், பாலிடெக்னிக் முதல்வர் அய்யாதுரை மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவன வேலைவாய்ப்புத் துறை அதிகாரி தர் செய்திருந்தார்.