Regional02

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இச்சங்கத்தின் நிர்வாகிகள் விவேக், தீனதயாளன், பாலாஜி, டில்லிபாபு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT