Regional01

திமுக சார்பில் விநியோகிக்க பதுக்கிய அரிசி மூட்டைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

தேர்தல் நன்னடத்தை விதிகள் கடந்த மாதம் 26-ம் தேதி மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வீட்டில் தலா 5 கிலோ எடை கொண்ட 44 அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் முத்துவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டிவனம் சார்-ஆட்சியர் அனு மற்றும் சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் கடந்த 27-ம்தேதி விசாரணை நடத்தினர். இதில், திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT