Regional02

பணி நீக்கப்பட்ட கரோனா கால மருத்துவர், செவிலியர் பணி கோரி ஆட்சியரிடம் மனு

செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் கள், செவிலியர்கள், தங்களுக்குப் பணி வழங்கக் கோரி சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா வேகமாகப் பரவியபோது தடுப்புப் பணிக்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 4 மருத்துவர்கள், 15 செவிலியர்கள், 9 பல்நோக்குப் பணியாளர்கள் என 27 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் போதிய நிதி இல்லை எனக்கூறி, பிப்.26-ம் தேதியுடன் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் பணியில் தொடர அனுமதிக்கக்கோரி ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு கொடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

பணியாளர்கள் கூறுகையில், ‘கரோனா காலத்தில் சிரமப்பட்டுப் பணிபுரிந்தோம். திடீரென எங்களை நீக்கிவிட்டனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தடுப்புப் பிரிவில் பணிபுரிவோரைத் தொடர்ந்து 3 மாதங்களுக்குப் பணிபுரிய அனும திக்கலாம் என அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. அதனடிப்படையில் எங் களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும், என்று கூறினர்.

SCROLL FOR NEXT