கிருஷ்ணகிரி பழையபேட்டையில் வசிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 124 குடும்பங்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை. கரோனாவிற்கு பிறகு வருமானம் இல்லை வீட்டு வாடகையை கட்ட முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே எங்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால், மனுவை பெட்டியில்போட்டனர்.