Regional02

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி,ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளுக்கான தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக நேற்று கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து, தேர்தல் மற்றும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயன்பாட்டிற்காக 120 இயந்திரங்கள் வழங்கப்பட்டன. பயிற்சியை ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலு வலர் ரத்தினசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT