Regional02

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை நாளைக்குள் ஒப்படைக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை நாளைக்குள் (3-ம் தேதி) அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய தொழில் அதிபர்கள், முன்னாள் ராணுவத்தினர் தங்களது பாதுகாப் பிற்காக உரிமம் பெற்ற துப்பாக் கிகள் வைத்துள்ளனர். அவ்வாறு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித்தேர்தல் நடை பெறும் காலங்களில் அவர்களது எல்லைக்குப்பட்ட காவல் நிலை யங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை துப்பாக்கிகள் எடுத்துச் செல்ல தடையாணை அமலுக்கு வந்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 323 துப்பாக்கி உரிமைதாரர்கள் மற்றும் உரிமம் காலாவதியாகி புதுப்பிக்க தவறியவர்களும் தங்களின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்களையும் நாளைக்குள் (3-ம் தேதி) தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பாதுகாப்பு நிமித்தம் ஒப்படைத்து, அதற்கான உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT