Regional02

தஞ்சாவூர் ராகா பல் மருத்துவமனையில் நாவிடெண்ட் டெக்னாலஜி அறிமுகம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் ராகா பல் மருத்துவ மனையில், தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக அதிநவீன நாவி டெண்ட் டெக்னாலஜி மூலம் பற்கள் பொருத்தும் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பல் மருத்துவர் பாஸ்கரன், கடந்த 20 ஆண்டு களாக ராகா பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். தற்போது, ராகா மருத்துவமனையில் பல் சிகிச்சை முறையை நவீனப்படுத்தும் வகையில், அதிநவீன நாவிடெண்ட் டெக்னாலஜி வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பல் மருத்துவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பல் மருத்துவர் பாஸ்கரன் கூறியபோது, “இந்த நவீன வசதி தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூரில் ராகா பல் மருத்துவமனையில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் சிகிச்சை அளிப்ப தன் மூலம் ஒருவருக்கு முப்பரிமாண முறையில் பற்களை தயார் செய்து, சரியான இடத்தில் பொருத்த முடியும். மேலும், இந்த முறையில் சிகிச்சை அளிப்பதால் வலியின்றி பல் எடுக்கப்பட்டு, உடனடியாக சரி செய்யப்பட்டு விடும்” என தெரி வித்தார். 

SCROLL FOR NEXT