தேர்தல் 2021

கந்தர்வக்கோட்டை தொகுதி நமக்குத்தான்- கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தொகுதி பொறுப்பாளர் க.செல்வராஜ் ஆகியோர் பேசும்போது, “கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியே வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. எனவே, திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் நாம் நிச்சயம் போட்டியிடுவோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நம் கூட்டணியே தமிழகத்தை ஆளும்” என்றனர். தொகுதி பங்கீடு இன்னும் தொடங்காத நிலையில், கந்தர்வக்கோட்டை நமக்குத்தான் என கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

SCROLL FOR NEXT