Regional02

சிதம்பரத்தில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்திய இந்து முன்னேற்ற கழக நிர்வாகிகள் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தனியார் ஹோட்டல் மாடியில் இந்து முன்னேற்ற கழகம் சார்பில் சிதம்பரம் நகர பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இத்தகவல் அறிந்த சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் நேரில் சென்று, தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.

அனுமதி பெறாமல் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தெரி வித்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை வெளியே அனுப்பினர்.

SCROLL FOR NEXT