ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முள்ளிப்பட்டு கிராம மக்கள் மற்றும் மடத்தின் நிர்வாகிகள். 
Regional01

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

செய்திப்பிரிவு

மடத்தின் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவல கத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் கோவிந்தராஜி சாமியார் மடம் மற்றும் நால்வர் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக ஓர் ஏக்கர் நிலம் உள்ளது. படைவீடு பரதேசி கோவிந்தராஜி சாமியார் மடத்துக்கு சொந்தமான மடம் என வருவாய்த் துறை பதிவேட்டில் உள்ளது.

இந்த நிலத்தை கிராம மக்கள் மேற் பார்வையில், மடத்தின் நிர்வாகிகள் பராமரிக்கின்றனர். மடத்துக்கு மட்டுமே உரிமையான நிலம்.

இந்நிலையில் கணினியில் பதிவேற்றம் செய்யும்போது, தவறுதலாக வேறொருவர் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மடத்துக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்ய சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்யும்போது, அவர்களது செயலை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றனர்.பின்னர் அவர்கள், வட்டாட்சியர் செந்திலை சந்தித்து மனு கொடுத்தனர்.

SCROLL FOR NEXT