Regional03

இட ஒதுக்கீடு வழங்கியதற்காக வன்னியகுல சத்திரிய சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி

செய்திப்பிரிவு

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வர் பழனிசாமிக்கு வன்னியகுல சத்திரிய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

வட ஆற்காடு வன்னியகுல சத்திரிய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத் துக்கு சங்கத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் சங்கரசிவம், பொரு ளாளர் சம்பத், செயலாளர் சுப்பிர மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், வன்னிய சமுதாய மக்களின் நீண்ட கால கோரிக்கையான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து, வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு வழி வகுத்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச் சர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் சங்க மூத்த நிர்வாகிகள் தூசி மணிலிங்கம், சண்முகம், வழக்கறிஞர் புகழேந்தி, வட்டத் தலைவர்கள் சண்முகம் (அரக்கோணம்), சுப்பிரமணியம் (திருத்தணி), சங்க உறுப்பினர் பன்னீர்செல்வம், சங்க மேலாளர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT