Regional04

மலர் கண்காட்சி அலங்காரம்: கருத்து தெரிவிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

உதகை மலர் கண்காட்சியில் மலர் அலங்காரம் குறித்த கருத்துகள் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதத்தில் 124-வது மலர்க் காட்சி நடைபெற உள்ளது. இக்காட்சியில் அமைக்கப்படும் பிரம்மாண்ட மலர் வடிவமைப்புக்கான கருத்துகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்பு பற்றிய கருத்துகள் வழங்கிய நபருக்கு முக்கிய விருந்தினர் மூலமாக மலர்க் காட்சியில் பரிசு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள், மாணவர்கள் பிரம்மாண்ட மலர் அமைப்பு தொடர்பான கருத்துகளை உரிய புகைப்படங்களுடன் பதிவு செய்யுமாறு நீலகிரி மலர், பழக்காட்சிக் குழுவினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட இணைய தளத்திலும் தங்களது கருத்துகளைப் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT