இயற்கையே அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரம் என சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பேசினார்.
தேசிய அறிவியல் தின விழா சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. விழாவில், ஆற்றல்சார் அறிவியல் துறைத் தலைவர் (பொ) இணைப் பேராசிரியர் ரமேஷ்குமார் வரவேற்றார். பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் தலைமை வகித்து பேசியதாவது:
இந்தியாவில் முதல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர்.சி.வி.ராமன் இயற்கையின் ஒரு பகுதியான ஒளியின் உள்ளார்ந்தப் பண்புகளை ஆய்வுக்குள்ளாக்கியே தன்னுடைய ஆய்வினை, உலகப் புகழ்ப் பெற்ற ஆய்வாக மாற்றினார்.
இன்றைய இளம் ஆய்வாளர் கள் இயற்கையிலிருந்து கிடைக் கும் தரவுகளை நேர்த்தியாக கையாண்டாலே தரமான ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்க இயலும். இயற்கையில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற தத்துவங்களே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரமாகத் திகழ்கின்றன. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இயற்கையை கூர்ந்து நோக்கினால் பல அற்புதக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நரம்பியல் நிபுணர் மருத்துவர் நடராஜன், உதவிப் பேராசிரியர் மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.