கடலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் தொழில் தொடங்க தாட்கோ மூலம் கடனுதவிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார். 
Regional02

தூய்மைப் பணியாளர் வாரிசுகள் தொழில் தொடங்க கடனுதவி

செய்திப்பிரிவு

கடலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, தாட்கோ மூலம் மத்திய அரசு நிதியின் கீழ் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது.

இக்கடனுதவிக்கான காசோ லையை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, “தாட்கோதுறையில் மத்திய அரசு நிதியுதவியுடன் துப்புரவு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொழில்தொடங்கி அவர்களது வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் பொருட்டு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை கடனு தவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10 சதவீதம் துப்புரவு பணியாளரின் பங்களிப்பு 90 சதவீதம் அரசின் கடனுதவியாகும். தற்போது, கடலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் குடும்பஉறுப்பினர்கள் 43 நபர்க ளுக்கு மொத்தம் ரூ 86 லட்சத்து29 ஆயிரத்து 465 மதிப்பில் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு தொழில்தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில், தாட்கோ மேலா ளர் கற்பகம், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT