Regional04

விருதுநகரில் திமுக வாகனப் பேரணி

செய்திப்பிரிவு

விருதுநகரில் “ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு” என்ற தேர்தல் பிரச்சாரப் பாடலை பிரபலப்படுத்தும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் எம்எல்ஏ சீனி வாசன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் தனபாலன், செயற்குழு உறுப்பினர் சுப் பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் பச்சமடம் பகுதியில் இரு சக்கர வாகனப் பேரணியை தனுஷ்குமார் எம்.பி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

SCROLL FOR NEXT