கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணபதி, தலைமையாசிரியர் சுந்தரம், மூலைக்கரைப்பட்டி ரமணா பாலிடெக்னிக் முதல்வர் சீனிவாசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது, மின்வாரிய இளநிலை பொறியாளர் ஊசிக்காட்டான் கருத்துரை வழங்கினர்.