Regional04

நடுக்கல்லூர் பள்ளியில் புதிய லேப் திறப்பு

செய்திப்பிரிவு

மாணவர்களின் அறிவியல் ஆர்வம், ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின்கீழ், ரூ. 20 லட்சம் செலவில், திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அட்டல் டிங்கரிங் லேப் கட்டப்பட்டுள்ளது.

இதனை, சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் மு.சுடலை திறந்துவைத்தார். தலைமை ஆசிரியர் சோ.ஹரிராமா தலைமை வகித்தார். ஆசிரியர் ஜோசப் அந்தோனி மைக்கேல் வரவேற்றார்.

தமிழாசிரியர் ஈ.சங்கர நாராயணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வின் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT