Regional03

வனப்பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

செய்திப்பிரிவு

வேலூர் சரக வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப் பட்டது.

வேலூர் மாவட்ட வனப்பகுதி யில் சாராய ஒழிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேலூர் சரகத்துக்கு உட்பட்ட அத்தியூர் காப்புக் காடுகள் மற்றும் குரு மலைப்பகுதிகளில் வனத்துறையினர் நேற்று முன் தினம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். குருமலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல் வனத்துறை அதிகாரிகளைப் பார்த்ததும் தப்பியோ டினர்.

இதையடுத்து, அங்கிருந்த சாராய அடுப்பு மற்றும் 2 ஆயிரம் லிட்டர் ஊறல், 100 லிட்டர் சாராயத்தை அழித்தனர்.

SCROLL FOR NEXT