Regional02

மத்திய அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று விலை உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த இரு கட்சிகளின் அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT