Regional02

மதுரை-திப்ருகார் சிறப்பு ரயில் மார்ச் 1-ம் தேதி இயக்கம்

செய்திப்பிரிவு

மதுரையில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் வரை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி மதுரை-திப்ருகார் (வண்டி எண் 06002) சிறப்பு ரயில் மதுரையில் இருந்து மார்ச் 1-ல் (திங்கட்கிழமை) மட்டும் முற்பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு மார்ச் 4 காலை 6.45 மணிக்கு திப்ருகாரை அடையும். இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங் கல்பட்டு, தாம்பரம், சென்னை எழுப்பூர் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT