திண்டுக்கல் அருகே பள்ள பட்டி ஊராட்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வந்த வட்டாட்சியரை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ஒன்றியம் பள்ள பட்டி ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த பரமன் என்ப வரும், துணைத் தலைவராக தனலட்சுமியும் உள்ளனர். இந் நிலையில் துணைத் தலைவர் மீது அமீர்பாஷா, லோகநாதன் ஆகிய உறுப்பினர்கள் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர். இதற்கு துணைத் தலைவர் தனலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று காலை மேற்கு வட்டாட்சியர் அபுரிஸ்வான் பள்ளபட்டி ஊராட்சி அலுவலகம் வந்து கருத்துக்கேட்புக் கூட் டத்தை நடத்த முயன்றார். இதற்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். புகாருக்குப் பதில் அளித்து 15 நாட்களுக்குப் பிறகுதான் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் எனக்கூறி வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் திமுகவின ருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் வட்டாட்சியர் கூட்டத்தை ரத்து செய்தார்.
ஊராட்சித் தலைவர் பரமன் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக அதிமுகவினர் சிலர் ஊராட்சி உறுப்பினர்களை அதிமுகவில் சேர வற்புறுத்துகின்றனர்.
அதிமுகவினரின் தூண்டு தலின்பேரில் துணைத் தலைவர் மீது பொய்யான புகாரைக் கொடுத் துள்ளனர். இதனை விசாரித்த ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், குற்றச்சாட்டை பொய் எனக் கூறிவிட்டார். திமுக ஊராட்சித் தலைவர்களை அதிமுகவினர் கட்சி மாறச்சொல்லி மிரட்டி வரு கின்றனர், என்றார்.