திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு விளம்பரங்கள், தலைவர்கள் படங்களை மறைத்து தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 
Regional01

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்ததை அடுத்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு விளம்ப ரங்கள், தலைவர்கள் படங்களை மறைத்து தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT