தேர்தல் 2021

நாகையில் முத்தரசன் போட்டி?

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு டெல்டா மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கடந்த காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தனித் தொகுதியாக உள்ளதால் முத்தரசன் போட்டியிட முடியாது.

மன்னார்குடி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இருமுறை வென்ற தொகுதி. கருணாநிதி வென்ற தொகுதி திருவாரூர். கீழ்வேளூர் தனித் தொகுதி. எனவே, நாகப்பட்டினத்தில் போட்டியிட முத்தரசன் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT