Regional02

பட்டியல் இனத்தவர் பெற்ற தாட்கோ கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருப்பூர்: தலித் விடுதலை இயக்கம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தாட்கோ கடன் வழங்கும் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காணும் திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில் கறவை மாடு, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு எனத் தொடங்கி, வாகன கடன் வரை வழங்கப்படுகிறது. அதேபோல, தாட்கோ திட்டத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார மேம்பாடு காணும் வகையில், நடப்பு நிதி ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக தாட்கோ திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT