Regional02

பெட்ரோல் வாங்க வங்கி கடன் கேட்டு போராட்டம்

செய்திப்பிரிவு

பெட்ரோல் வாங்க வங்கிக் கடன் கேட்டு தேனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட மாணவரணி சார்பாக போராட்டம் நடந்தது.

தேனி அல்லி நகரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் நடந்த போராட்டத்துக்குப் பொதுச் செயலாளர் திவான் தலைமை வகித்தார். பெட்ரோல் விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் தவித்துவரும் நிலையில் இந்த விலை உயர்வு பலரையும் வெகுவாய் பாதித்துள் ளது.

எனவே, பெட்ரோல் வாங்க தனிநபர் கடன் கேட்டுப் போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT