Regional02

ஓய்வுபெறுவோர் வயதை அரசு அதிகரித்தது ஏன்? சிவகங்கை எம்.பி. புதிய விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையத் திலும், சிவகங்கை அருகே ஒக்கூரிலும் செய்தியாளர் களிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது:

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முறிவு என தமிழக அமைச்சர் ஜெயக் குமார் பேசுகிறார். எங்கள் கூட்டணி பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. ஓய்வுபெறுவோருக்கு பணப் பலன்கள், ஓய்வூதியத்தைத் தர வேண்டும். ஆனால் நிர்வாகச் சீர் கேட்டால் தமிழக அரசிடம் போதிய பணம் இல்லை. அதனால்தான் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியுள்ளனர் என்று கூறினார்.

SCROLL FOR NEXT