ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற எருது விடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஒடிய காளை. 
Regional01

எருது விடும் விழாவில் 15 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

காலை 8.30 மணிக்கு தொடங்கிய விழா நண்பகல் 1 மணியளவில் முடிவடைந்தது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

ஆம்பூர் வருவாய்த் துறையினர் போட்டிக்கான ஏற்பாடுகளை கண்காணித்து ஆய்வு செய்தனர். ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போட்டி முழுவதும் வீடியோவால் பதிவு செய்யப்பட்டது. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த எருதுகளின் உரிமையாளர்களுக்கு 40 வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காண வந்தவர்களில் 15 பேர் மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர்.

SCROLL FOR NEXT