Regional02

ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவர் நடக்க முடியாத நிலையில், சாலையோரம் கடந்த சில நாட்களாக வசித்துவந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அனுப்பர்பாளையத்தில் உள்ள நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற அறக்கட்டளை நிர்வாகி தெய்வராஜ், மூதாட்டியை மீட்டு, 15 வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். மூதாட்டியிடம் விசாரித்தபோது, பெயர் வீரம்மாள் (90) என்றும், குடும்பத்தினர் யாரும் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, காசிக் கவுண்டன்புதூரில் உள்ள ‘சீடு’ முதியோர் இல்லத்தில் மூதாட்டி ஒப்படைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT