Regional02

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்குஇலவச எண் அறிமுகம்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு ‘செஹலி’ (தோழி) என்னும் 1098 இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகள் இந்த எண்ணை தொடர்புகொண்டு புகார் செய்யலாம். சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் சரயூ, சார் ஆட்சியர் மோனிகாரானா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT