Regional01

உண்டியலை உடைத்து திருட்டு

செய்திப்பிரிவு

ஈரோடு மணல்மேடு பாலமுருகன் கோயில் பிரகாரத்தில், உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கைகள் கோயில் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று காலை பூசாரி கோயிலுக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் கோயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே போவது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மணல்மேடு பாலமுருகன் கோயிலில் ஏற்கெனவே இருமுறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக திருட்டு நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT