பில்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்கும் வீரர். 
Regional03

பில்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டில் 29 பேர் காயம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே பில்லம நாயக்கன்பட்டியில் கதிர் நரசிங்கப் பெருமாள் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடை பெற்றது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களைச் சேரந்த 598 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

களத்தில் சீறிப்பாய்ந்த காளை களை அடக்க முயன்ற 29 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு அமைப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT