விருதுநகரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைக் கட்டிடம். 
Regional03

விருதுநகரில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

விருதுநகரில் ரூ.18 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனைக் கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப் பேறு மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் வகையில், ரூ.18 கோடி செலவில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.

பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனைக் கட்டிடத்தையும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6.14 கோடியில் கட்டப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டிடத்தையும் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையொட்டி மருத்துவமனை கட்டிடத்தில் ஆட்சியர் இரா.கண்ணன் குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செலிவியர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT