Regional02

அலங்கார மீன் வளர்ப்பகம் அமைக்க மானியம் விண்ணப்பிக்க ஈரோடு ஆட்சியர் அழைப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் திட்டத்தின் கீழ், அலங்கார மீன்வளர்ப்பகம் அமைக்க 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் திட்டத்தின் கீழ், அலங்கார மீன்வளர்ப்பகம் அமைத்திட விரும்புவோர், குறைந்த பட்சம் 150 சது ர மீட்டர் பரப்பளவிலான இடத்துடன், போதுமான நீர் ஆதாரம் கொண்டிருக்க வேண்டும். நிலமானது சொந்தமாகவே அல்லது விண்ணப்பிக்கும் நாளிலிருந்து 7 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகவே இருக்கலாம். குத்தகை நிலம் எனில் ஒப்பந்தத்தை பதிவு செய்திருக்க வேண்டும். பயனாளிகள் திட்டத்திற்கு தொழில் நுட்ப மற்றும் நிதி விபரங்களை தாங்களே தயார் செய்து வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி (0424-2221912) மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT