3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே அண்ணா சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள். அடுத்த படம்: தி.மலை மாவட்டம் ஆரணியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். கடைசிப்படம்: செங்கம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். 
Regional03

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 330 மாற்றுத்திறனாளிகள் கைது 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

செய்திப்பிரிவு

3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 330 மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் நேற்று செய்தனர்.

தெலங்கானா, புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் மாற்றுத் திறனாளி களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப் படுவதை போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் நிறுவனங் களில் வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் 2-ம் கட்ட காலவரை யற்ற குடியேறும் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர்.

வேலூர் அண்ணா சாலையில்உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் முன்பாக 3 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கள் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக் கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட துணைத்தலைவர் ஏகாம்பரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குழு உறுப்பினர் குப்பன் தலைமையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி திருப்பத்தூர் நகர காவல் துறையினர் 80-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

தி.மலை

இதையடுத்து, சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆரணி

இதையடுத்து, சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT