திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். படம்: இரா.கார்த்திகேயன். 
Regional02

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க திருப்பூர் மாவட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று நடந்த போராட்டத்துக்கு வட்ட செயலாளர் பா.ராஜேஷ் தலைமை வகித்தார். வட்ட தலைவர் டி.ஜெயபால், மாவட்ட பொருளாளர் ஆர்.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 என்பதை ரூ.3000 ஆகவும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 என்பதை ரூ.5000 ஆகவும் வழங்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, கடும் வெயிலை பொருட்படுத்தாமல், ஆட்சியர் அலுவலகம் எதிரில் தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்பு, அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT