Regional02

விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று மாலை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர் சங்கரன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

SCROLL FOR NEXT