கடலூர் ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
கடலூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த ரவுடி வீரா என்ற வீராங்கன் (35) கடந்த 16-ம் தேதி இரவு திருப்பாதிரிப்புலியூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடி கிருஷ்ணா பண்ருட்டி அருகே போலீஸால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடலூர் திருப்பாதிரிப் புலியூரைச் சேர்ந்த ராஜா மகன்கள் விக்ரம்(27), ராக்கி (25) ஆகியோர் நேற்று விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் அருண்குமார் முன்பு சரணடைந்தனர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடி கிருஷ்ணா பண்ருட்டி அருகே போலீஸால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.