திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள். 
Regional02

ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்றும் இப்போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட 600-க்கும் மேற்பட்டோரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT