Regional01

ரோஜா பூ வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கக்கோரி திமுக எம்பி தர்ணா

செய்திப்பிரிவு

வஉசி பூ மார்க்கெட்டில் ரோஜா பூ வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க வலியுறுத்தி, சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு எம்பி பார்த்திபன் தலைமையில் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்ணாவுக்கு பின்னர் எம்பி பார்த்திபன் தலைமையில் திமுகவினர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் எம்பி கூறியதாவது:

சேலம் வஉசி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்து வருகிறது. ரோஜா பூ வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும்.

சேலம் மாநகரில் வாகன நிறுத்துமிடம், பொது கழிப்பிடங்களில் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT