Regional01

இலவசங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடித்து விடலாம் என அதிமுக எண்ணுகிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

சேலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு துறைகளிலும் மக்களுக்கான திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து கொடுத்துள்ளது. இதனை மத்திய பாஜக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல்வேறு தொல்லைகளையெல்லாம் கடந்து, வெற்றிகரமாக 5 ஆண்டு ஆட்சியை நிறைவுசெய்துள்ளேன்.

என்னைப் பற்றி பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும், நாராயணசாமி ஊழல் செய்தார் என்று நிரூபிக்க முடியுமா?. தமிழகத்தில் விளம்பரங்கள் மற்றும் இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடித்துவிடலாம் என அதிமுக எண்ணுகிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்றுபவர்களைத் தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை அதிமுக உணரவில்லை, என்றார்.

SCROLL FOR NEXT