பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடியில் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து வாகன ஓட்டுநர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளர் பட்டாணி தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் அருள்ராஜ், பொருளாளர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். உரிமை கரங்கள் ஓட்டுநர்கள் சங்க மாநில தலைவர் ஜெயராஜ், தென்னிந்திய வாகன ஓட்டுநர்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ராஜசேகரபாண்டியன் ஆகியோர் பேசினர்.

வாடகை கார் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT