தேர்தல் 2021

அடுத்த முறை போட்டியில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தப்பிப் பிழைத்தேன். 300 வாக்குகள் மாறியிருந்தால் நிலைமையே வேறு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் என்னென்ன சூழ்நிலைகள் இருந்தன என்று அனைவருக்கும் தெரியும். கூவத்தூரில் நாங்கள் பட்டபாடு சொல்ல முடியாது. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்தான் நிலைத்த, நீடித்த ஆட்சி உருவானது.

மாவட்டச் செயலாளராக இருப்பதால் மீண்டும் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே, 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துவிட்டேன். வரும் தேர்தலில் வெற்றிபெற்றால், விடுபட்ட திட்டங்களை நிறைவு செய்வேன். அடுத்தமுறை, நல்லவர் ஒருவருக்கு வழிவிட்டு நிற்பேன். இம்முறை எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் அதிமுக வெற்றிபெறுவது உறுதி என்றார்.

SCROLL FOR NEXT