டி.செந்தில்குமார் 
Regional02

ஈரோடு சிஐஐ மண்டல கவுன்சில் தலைவராக சக்தி மசாலா இயக்குநர் செந்தில்குமார் நியமனம்

செய்திப்பிரிவு

ஈரோடு சிஐஐ மண்டல கவுன்சிலின், தலைவராக ஈரோடு சக்தி மசாலா நிறுவன இயக்குநர் டி.செந்தில்குமார், துணைத் தலைவராக துரைபழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஈரோடு மண்டல ஆண்டுக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில், சிஐஐ மண்டல கவுன்சில் 2020–21-ம் ஆண்டுக்கான தலைவராக ஈரோடு சக்தி மசாலா நிறுவன இயக்குநர் மற்றும் குவால் பிஸ் புட் நிறுவன மேலாண்மை இயக்குநர் டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் குவால் பிஸ் புட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதேபோல் பல்லவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநர் துரைபழனிசாமி சிஐஐ ஈரோடு மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். 

SCROLL FOR NEXT