காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு இலவச தரவு அட்டைகள் (டேட்டா கார்டு) வழங்கும் விழாவில் மாணவிக்கு தரவு அட்டையை வழங்குகிறார் ஆட்சியர் மகேஸ்வரி. 
Regional02

கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவுடன் கூடிய இலவச தரவு அட்டைகள் (டேட்டா கார்டுகள்) நேற்று வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். கரோனா அச்சம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததால் இணையத்தை பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க பிப்ரவரி 2021 முதல் மே 2021 வரை 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா உடன் கூடிய விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி 63 கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மொத்தம் 42,478 பேர் பயன் பெற உள்ளனர். இந்த இலவச தரவு அடைகளை ஆட்சியர் மகேஸ்வரி வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி முதல்வர் (பொ) மதி ராமலிங்கம், உத்திரமேரூர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரி முதல்வர் பத்மினி, இணை இயக்குநர் (மருத்துவம்) ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT