கள்ளக்குறிச்சியில் 3,465 கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச டேட்டா கார்டுகள் வழங் கப்பட்டன.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உயர்கல்வித்துறை சார்பில் கல் லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி இணையதள தரவு அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக ஆட்சியர் பேசுகையில், "கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 1,591 மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,175 மாணவ, மாணவிகள், அரசு மற்றும் சுய நிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 699 மாணவ, மாணவிகள் ஆக மொத்தம் 3,465 மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிக் கல்வியுடன் மத்திய அரசின் கீழ் இயங்கும் சுவாயம் தளத்தின் வாயிலாக கூடுதல் பட்டம் மற்றும் சான்றிதழ் சார்ந்த கல்விகள் பயின்று வேலைவாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.
இதில் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வி.சண்முகம், சங்கராபுரம் தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் வி.பெருமாள், ஏ.கே.டி. நினைவு தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் பி.கே.கபிலர், முருகா தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் சி.ஆர்.கண்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.