கிருஷ்ணகிரியில் தருமபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். பரமசிவம் வரவேற்றார். கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், 11-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்குமாறு அரசைக் கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.